சிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்: மத்திய அரசு

 

சிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்: மத்திய அரசு

சிபிஐ இடைக்கால இயக்குநராக உள்ள நாகேஸ்வர ராவுக்கு கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்து அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது

டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குநராக உள்ள நாகேஸ்வர ராவுக்கு கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்து அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையேயான பனிப்போர் முற்றியதையடுத்து, இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்பான ஒரு வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ராகேஷ் அஸ்தானாவும் குற்றம் சாட்டியுள்ளார்.  நாட்டின் மிகப் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் உயர்பதவி வகிக்கும் இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சிபிஐ இணை இயக்குனர் நாகேஸ்வர் ராவை தற்காலிக சிபிஐ இயக்குனராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், நாகேஸ்வர ராவுக்கு பதவி உயர்வுடன் கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்து அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது