சின்மயி லீக்ஸ்: ஆண்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பெண்கள் கூறக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து!

 

சின்மயி லீக்ஸ்: ஆண்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பெண்கள் கூறக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து!

ஆண்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பெண்கள் கூறக்கூடாது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: ஆண்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பெண்கள் கூறக்கூடாது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக  பின்னணி பாடகி சின்மயி,  கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து  புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘ஆண்கள் மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருவதன் மூலம் நாட்டின் நல்ல தன்மைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பெண்கள் கூறக்கூடாது. பாலியல் குற்றச்சாட்டு குறித்து தவறாக சொல்லப்பட்டு வருகிறது. பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு வேண்டும். குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்கள் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் இருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளைக் கூறும் ஒருவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஐயப்ப பக்தர் குடும்பத்திலிருந்து வந்த எந்த ஒரு பெண்ணும் சபரிமலை போகலாம் வாருங்கள் என இழுத்துச்சென்றால் கூட வரமாட்டார். அது ஒரு வழிபாட்டு முறை. அரசியல் சட்டங்களோ விதிமுறைகளோ இதில் தலையிட முடியாது” என்று கூறியுள்ளார்.