சின்மயி போட்ட ஒரே ஒரு பதிவு! வைரமுத்துவுக்கு வழங்கப்படவிருந்த விருது விழா கேன்சல்!!

சின்மயி போட்ட ஒரே ஒரு பதிவு! வைரமுத்துவுக்கு வழங்கப்படவிருந்த விருது விழா கேன்சல்!!

தனியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். 

தனியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். 

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பாடகி சின்மயி குற்றச்சாட்டியதையடுத்து  தொடர்ந்து மீ டூ என்ற இயக்கத்தின் மூலம் சமூகவலைதளங்களில் பாலியல் கொடுமை குறித்து பேசி வருகிறார். இந்நிலையில்  எஸ்ஆர்எம்  பல்கலைக்கழகம் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் ஒன்றை வழங்கி கௌரவிக்கவுள்ளதாகவும், நாளை நடைபெறவுள்ள அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு வைரமுத்துவுக்கு டாக்டர் வழங்குவதாகவும் தகவல்கள் வெளியானது. இதையறிந்து கடுப்பான பாடகி சின்மயி, “9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்குப் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம்” எனக்கூறி ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

வைரமுத்து- சின்மயி
சின்மயின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் தீயாய் பரவி விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டாராம். மத்திய அமைச்சர் ராஜ்நாத் வருகை ரத்தானதால் அந்த நிகழ்ச்சி நடைபெறுமா என்பதே சந்தேகமாகதான் இருக்கிறதாம்.