சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கும் தமிழிசை சவுந்தரராஜன்

 

சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கும் தமிழிசை சவுந்தரராஜன்

பாடகி சின்மயிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கியுள்ளார்.

சென்னை: பாடகி சின்மயிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கியுள்ளார்.

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஹாலிவுட்  திரையுலக பெண்கள் பேசத் தொடங்கியதையடுத்து, பாலிவுட்டிலும் நடிகைகள் பேச தொடங்கினர். தற்போது தமிழ் திரையுலகிலும் இந்த #MeToo ஹேஷ் டாக் புயலை கிளப்பி வருகிறது.

அந்த வகையில் பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகாரை அளித்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. சின்மயியின் புகாருக்கு வைரமுத்து விளக்கமளித்திருக்கிறார். இருப்பினும் அவரது விளக்கமானது முறையானதாக இல்லை என கூறி அவருக்கு எதிராக சமூக வலைதளவாசிகள் களமாடி வருகின்றனர்.

இந்நிலையில், பாடகி சின்மயிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?? என பதிவிட்டுள்ளார்.