சின்ன மாநிலம்தான்…. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் கோடீஸ்வரர்களாம்….

 

சின்ன மாநிலம்தான்…. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் கோடீஸ்வரர்களாம்….

ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.களில் பெரும் பகுதியினர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.

ஜார்க்கண்ட்மாநிலத்தின் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30ம் தேதி தொடங்கி கடந்த 20ம் தேதி வரை மொத்தம் 5 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 23ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியான பா.ஜ.க. படு தோல்வி அடைந்தது. ஜே.எம்.எம்., காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி  அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 

ஜார்க்கண்ட் மாநில வரைபடம்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஒரு ருசிகரமான தகவல் வெளியாகியுள்ளது. புதிய சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.க்களில் 69 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பே சுமார் ரூ.4 கோடியாம். கடந்த 2014ம் ஆண்டில் சட்டப்பேரவையில் 51 சதவீத கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

ஜே.எம்.எம்.

எந்த கட்சியில் அதிக கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்தால் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவில் அதிகமாக உள்ளனர். அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 73 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதற்கு அடுத்து பா.ஜ.க.வில் 72 சதவீதம் எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளது. அடுத்து ஜே.வி.எம். கட்சியில் 87 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 56 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.