சின்ன சின்ன சேனல்களுக்கு கெட்அவுட்… யூட்யூப் கொடுத்த அதிர்ச்சி!

சின்ன சின்ன சேனல்களுக்கு கெட்அவுட்… யூட்யூப் கொடுத்த அதிர்ச்சி!

யூடியூபில் பலரும் சேனல் ஆரம்பித்து வீடியோ போஸ்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில், வருமானம் ஈட்டாத சேனல்களை நீக்க யூடியூப் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
யூடியூபில் வெளியாகும் வீடியோக்களுக்கு அதை பார்த்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை யூடியூப் அளிக்கிறது.

youtube

இதனால், வீடியோ கேமரா வைத்துள்ள பலரும் யூடியூப் சேனல் நடத்த ஆரம்பித்துவிட்டனர். இப்படி வருமானம் ஈட்டாத யூடியூப் சேனல்களை நீக்க யூடியூப் திட்டமிட்டுள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு யூடியூப் சேனல் உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நீக்கப்படும் நடவடிக்கை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தினமும் லட்சக் கணக்கில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் அதில் பெரும்பாலான வீடியோக்களை பார்த்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்தைக் கூட தொடுவது இல்லை என்றும் கூறப்படுகிறது. இப்படி வீடியோக்கள் குவிவதைத் தடுக்க இந்த நடவடிக்கையை யூடியூப் எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால், உலகம் முழுவதும் உள்ள யூடியூப் சேனல் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.