‘சின்ன கொம்பன்’ காளை ஜல்லிக்கட்டில் சீறிப்பாயப் பயிற்சி கொடுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் !

 

‘சின்ன கொம்பன்’ காளை ஜல்லிக்கட்டில் சீறிப்பாயப் பயிற்சி கொடுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் !

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வளர்த்து வந்த கொம்பன் என்னும் காலை ஜல்லிக்கட்டு களத்திலேயே வாடி வாசலில் மோதி வீர மரணம் அடைந்தது.

வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குக் காளைகளைத் தயாராக்கும் பணி மும்முரப்படுத்த பட்டுள்ளது. 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக் கட்டு நடைபெறும். ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்யும் பணி வழக்கமாக 60 நாட்களுக்கு முன்னரே ஆரம்பிக்கும். அதன் படி, கடந்த நவம்பர் மாதமே நீச்சல் பயிற்சி, மண்ணை முட்டி சிதறடித்தல் மற்றும் வாடிவாசல் போன்ற மாதிரிகளை அமைத்து அதில் பாய விடுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

ttn

காளைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் அமைச்சர் விஜய பாஸ்கரும் ஈடுபட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வளர்த்து வந்த கொம்பன் என்னும் காலை ஜல்லிக்கட்டு களத்திலேயே வாடி வாசலில் மோதி வீர மரணம் அடைந்தது. அந்த காளையை இது வரை யாராலும் அடக்க முடிந்ததில்லை. அதன் இறப்பிற்குப் பிறகு சோகத்தில் மூழ்கிய அமைச்சர் அதன் நினைவாக ‘சின்ன கொம்பன்’ என்னும் காளையை வளர்த்தார். 

ttn

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் இந்த காளையை, ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்க விஜயபாஸ்கர் தீவிர பயிற்சி அளித்து வருகிறார். அவரது தோட்டத்தில் மண்ணை முட்டி சிதறடித்தல் உள்ளிட்ட பயிற்சிகளைத் தானே, சின்ன கொம்பன் காளைக்கு அளித்து வருகிறார். இந்த சின்ன கொம்பன் காலை அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ளது.