சின்னாபின்னமாக சிதறும் அதிமுக கூட்டணி… பேரதிர்ச்சியில் பதறும் எடப்பாடி..!

 

சின்னாபின்னமாக சிதறும் அதிமுக கூட்டணி… பேரதிர்ச்சியில் பதறும் எடப்பாடி..!

உள்ளாட்சி தேர்தலால் அதிமுக கூட்டணியே உடைந்து போகும் அளவுக்கு போகும் என்கிறார்கள்.

உள்ளாட்சி தேர்தலே அறிவிக்கவில்லை. ஆனால் அதிமுகவில் சீட் வாங்க உள்குத்து வேலைகள் தொடங்கி விட்டது. 

இருக்காதா பின்னே மக்களிடம் நேரடியாக செல்வாக்குள்ள பதவிகளாயிற்றே. அதுதான் இந்த உள்குத்துக்கு காரணம். இன்னொரு காரணம், எடப்பாடி  சொல்பவருக்கு சீட் கன்பார்ம். அதனால் பலாவில் மொய்த்த ஈ போல பலரும் எடப்பாடியின் சொந்த மாவட்டமான  சேலத்தில் சொந்தங்கள், பள்ளி பருவ நண்பர்கள், கட்சி நண்பர்கள், நெருக்கமான அதிகாரிகளை பிடிக்க அதிமுகவினர் முட்டி மோதி வருகிறார்கள். 

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில குழப்பம் வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். சேலம் மாநகராட்சி தேர்தலில் அதிமுகவில் யாருக்கு எத்தனை சீட் என்று இப்போதே பரபரப்பாக பேசப்படுகிறது. அதிலும் தேமுதி கட்சியினர், தங்களுக்கு மேயர் சீட் உள்பட 10 கவுன்சிலர் சீட் வேண்டும் என கொடி பிடிக்கிறார்கள்.  இதை கேள்விப்பட்ட பாமகவும் துணை மேயர் சீட் உள்பட 10 சீட் வேண்டும் என அடம் பிடிக்கிறது. போதாததற்கு பாஜக இந்தமுறை அதிமுகவிடம் தங்களுக்கு குறைந்தது 5 சீட்டாவது வாங்கி விட வேண்டும் என டெல்லி வரைக்கும் சிபாரிசு கேட்டு போய் இருக்கிறார்கள். 

இப்படி கூட்டணி கட்சிக்காரர்கள் அனைவரும் கவுன்சிலர் சீட்களை பங்கு போட்டுக் கொண்டு இருப்பதை கேள்விப்பட்டு, அதிமுகவினர் அய்யய்யோ, அப்படினா இந்த முறை நமக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காதோ என புலம்பித் தள்ளி வருகிறார்கள்.  எது எப்படியோ மேயர் சீட்டை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என எடப்பாடியாரின் காதில் போட்டுக் கொண்டே இருக்கிறார்களாம். 

 ஆனால் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றவருக்காக மேயர் சீட்டை கேட்கிறோம் என தேமுதிக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலால் அதிமுக கூட்டணியே உடைந்து போகும் அளவுக்கு போகும் என்கிறார்கள்.