சின்னம்மாவுக்கு சிக்கல் ! பின்னணியில் இரட்டை வி.வி.ஐ.பிகளா?

 

சின்னம்மாவுக்கு சிக்கல் ! பின்னணியில் இரட்டை வி.வி.ஐ.பிகளா?

கடந்த மாதம் வரை விரைவில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரப்போகிறார்.அ.தி.மு.க-வே அவர் பின்னால் போய்விடும் .என்ன செய்யப் போகிறது இப்போதைய தலைமை என்பதுதான் தமிழ் ஊடகங்ளில் விவாதப்பொருளாக இருந்தது.

தினகரன் பெங்களூர் சென்று சசிகலாவைச் சந்தித்து தன் பங்குக்கு பரபரப்பு கிளப்பினார்.ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நெறுங்க நெருங்க தொடர்ந்து சசிகலாவை பற்றி தினம் ஒரு திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டு வருகிறது வருமான வரித்துறை.

பணமதிப்பு இழப்பு காலத்தில் அவர் வாங்கிய சொத்துக்களின் பட்டியல், செல்லாத நோட்டுக்களை வட்டிக்கு விட்டது , கடந்த ஜூனில் ரைடு நடந்த நாமக்கல் கம்பெனிக்கும் சசிகலாவுக்கும் இருந்த தொடர்பு என்று வரிசை கட்டின செய்திகள். இப்போது ஜெயலலிதாவின் போயஸ்கார்டன், கொடநாடு எஸ்டேட் உட்பட எல்லாச் சொத்துக்களும் எனக்குத்தான் சொந்தம் என்கிற அவரது வாக்குமூலம் வெளியாகி இருக்கிறது!

sasikala

 இதன் மூலம் சொல்லப்படும் செய்தி என்ன?.சசிகலா இப்போதைக்கு வெளியே வரமாட்டார். இந்தச் செய்தியால் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் மட்டுமே லாபம். இதை எப்படிச் சாதித்தார்கள் இந்த இரட்டையர்கள். இதுவரை தன் வசமிருக்கும் கார்டுகளை தனது லாபத்துக்கு மட்டுமே இறக்கி வந்த பி.ஜே.பி இப்போது பன்னீர், எடப்பாடி லாபத்துக்காகப் பயன்படுத்துவது ஏன். இப்போது இதுதான் அ.தி.மு.க-வில் அதிகம் பேசப்படும் விசயம்.

எதை வைத்து, அல்லது எதைக்காட்டி இந்த தமிழக இரட்டையர்கள், அந்த குஜராத் இரட்டையர்களிடம் காரியம் சந்தித்து இருப்பார்கள், இதற்கு அ.தி.மு.க என்ன விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதே அவர்களது கவலையாக இருக்கிறது.