சின்னப்பையன் செய்வதை பார்த்து செய்வதற்கு வெட்கமா இல்லையா? ஸ்டாலினை சீண்டும் கமல்

 

சின்னப்பையன் செய்வதை பார்த்து செய்வதற்கு வெட்கமா இல்லையா? ஸ்டாலினை சீண்டும் கமல்

நான் ஒரு சின்னப்பையன் நான் செய்வதை பார்த்த பின் நீங்கள் செய்வதற்கு வெட்கமாக இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலினை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்

சென்னை: நான் ஒரு சின்னப்பையன் நான் செய்வதை பார்த்த பின் நீங்கள் செய்வதற்கு வெட்கமாக இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலினை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தீவிர அரசியலில் முனைப்புடன் செயல்பட்டு வரும் அவர், பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதேபோல், மாதிரி கிராமசபை கூட்டங்களையும் நடத்திய அவர், மக்களோடு மக்களாக கிராமசபை கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.

இதையடுத்து, ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம்’’ என்ற தலைப்பில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. அதனை திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட அக்கட்சியினர் தலைமையேற்று நடத்தினர்.

இதுவரை கிராம சபை கூட்டங்களை நடத்தாதா ஸ்டாலின் தற்போது மட்டும் நடத்துவது ஏன்? கமலை பார்த்தது ஸ்டாலின் காப்பி அடிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கிராம சபை என்ற ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? ஒரு சின்னப்பையன் அதை செய்த பின் நீங்கள் செய்கிறீர்களே…வெட்கமாக இல்லையா? உங்களுக்கு என ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், சட்ட மன்றத்தில் சட்டையை கிழித்து கொள்ள மாட்டேன். சட்டை கிழிந்தாலும் புது சட்டையுடன் தான் வெளியில் வருவேன் நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், யார் வேண்டுமானாலும் படித்துப் பார்க்கலாம் என்றார்.

தான் தாமதமாக அரசியலுக்கு வந்தமைக்காக மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்த கமல், அரசியலுக்கு வருவதற்கு வழி என்று எதுவுமில்லை என்றார்.