சின்னத்திரை நடிகர் சங்கத்தை டார்கெட் செய்யும் ராதாரவி!

 

சின்னத்திரை நடிகர் சங்கத்தை டார்கெட் செய்யும் ராதாரவி!

தமிழ் சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

சென்னை: தமிழ் சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்தவர் ராதாரவி. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான ஐவர் கூட்டணி வெற்றிப்பெற்றது.

nadigarsangam

தற்போது டப்பிங் ஆர்டிஸ்ட் சங்க தலைவராக இருந்து வரும் நடிகர் ராதாரவி, நடைபெறவுள்ள சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 1200 உறுப்பினர்களை கொண்ட சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.

நடிகர் போஸ் வெங்கட் செயலாளராக உள்ள தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம், ம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், நாளை (டிச 25), கடைசிப் பொதுக்குழு கூட்டம் கூட இருக்கிறது. அதில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அறிவிக்க உள்ளனர்.

smallscreen

2019 ஜன.26ம் தேதி நடைபெறவுள்ள சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் தேர்தலில் 4 அணிகள் போட்டியிடவுள்ளதாகவும், அதில் ஒரு அணியில் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுவதாக கூறப்படுகிறது.