சினிமா படப்பிடிப்பு எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

 

சினிமா படப்பிடிப்பு எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் மற்றும் பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்டுள்ள பகுதியில் சென்னையில் இருந்த வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் மற்றும் பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்டுள்ள பகுதியில் சென்னையில் இருந்த வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்த அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு உணவுபொருள்களை வழங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி பயணியர் விடுதியில் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

kadambur raju

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ , “மக்களின் அத்தியாவசிய பணிகளுக்காக தமிழக முதல்வர் மாவட்ட நிலைக்கு ஏற்ப ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தி கடைகள், தொழில் நிறுவனங்கள் திறக்க அனுமதி கொடுத்துள்ளார். சினிமா படபிடிப்பு என்பது லைட் மேன் முதல் இயக்குநர் வரை நூறு முதல் 200 தொழிலாளர்கள் பணிபுரியம் சூழ்நிலை உள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் போது அப்பகுதியில் பார்வையாளராக மக்களும் கூட கூடிய சூழ்நிலை உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் 17 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு எந்த நிலை வருகின்றதோ, அதற்கு ஏற்ப சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 1460 பீகார் மாநில தொழிலாளர்கள் நாளை தனி ரெயில் மூலமாக அவர்கள் சொந்த செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.