சினிமா படப்பிடிப்பு அல்லாத ரெக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளுக்கு அனுமதியளிக்க கோரிக்கை!

 

சினிமா படப்பிடிப்பு அல்லாத ரெக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளுக்கு அனுமதியளிக்க கோரிக்கை!

திரைத்துறையினருக்கும் ஊரடங்கிலிருந்து தளர்வளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசிடம் கோரிக்கை  விடுத்துள்ளார். 

திரைத்துறையினருக்கும் ஊரடங்கிலிருந்து தளர்வளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசிடம் கோரிக்கை  விடுத்துள்ளார். 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 39,980 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 281 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் மே 17 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,  திரைப்படத்துறை, சின்னத்திரை, விளம்பரத்துறை உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் தமிழக அரசு தொழில்துறையினருக்கு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட சில தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் திறக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. 

ஆர்.கே.செல்வமணி

இந்நிலையில் தொழில்துறையினருக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் போல் திரைத்துறையினருக்கும் வழங்க வேண்டும் என்றும் குறைந்தபட்சமாக படப்பிடிப்பு அல்லாத ரெக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளுக்கேனும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசிடம் கோரிக்கை  விடுத்துள்ளார். இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் பணி செய்ய வைக்க இயலும் என்பதால் திரைப்படங்களுக்கு போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளும், தொலைகாட்சி பணிகளுக்குமான அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஆர்.கே. செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலம் சம்மேளனத்தில் 50% தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழல் ஏற்படும் என்றும், இதன்மூலம் அவர்கள் பட்டினி சாவிலிருந்து தப்பித்துக்கொள்ள இயலும் என்றும் தெரிவித்தார்.