சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்.. அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை

 

சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்.. அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை

அமைச்சர் கடம்பூர் ராஜு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்பட்டன. அதே போல தியேட்டர்களும் செயல்பட கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை, வெள்ளித்திரை பட பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்கை திறப்பது குறித்தும், படப்பிடிப்பை துவக்கி குறித்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ttn

அந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர் பன்னீர்செல்வம், இயக்குனர் ஆர் வி உதயகுமார், ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த ஆலோனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.செல்வ மணி, படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அளிக்கும் பட்சத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றுவோம் என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்ததாக கூறினார். 

ttn

தொடர்ந்து, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்குமாறு ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதனை பற்றி முதல்வருடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசித்து முடிவை வெளியிடுவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.