சினிமா டூ அரசியல்: போட்டியிட்ட நடிகை நடிகைகளின் நிலை இதுதான்!?

 

சினிமா டூ  அரசியல்: போட்டியிட்ட நடிகை நடிகைகளின் நிலை இதுதான்!?

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் நடிகைகள் வெற்றி-தோல்வியைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக இரு தேசிய கட்சிகளான பாஜக , காங்கிரஸ் இரண்டுமே நடிகர் நடிகைகளை முன்னிறுத்தி வெற்றி பெறுவதில் குறியாக இருந்தன. அப்படி தேர்தலில் களம் கண்ட நடிகர் நடிகைகளில் யார் யார் வென்றுள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம். 

smirithi

மத்திய அமைச்சரும், முன்னாள்  நடிகையுமான ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை  எதிர்த்துப்  போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

hema

பாஜக சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிட்ட நடிகை ஹேமாமாலினி தன்னை  எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் பதாக்கை வென்றுள்ளார். 27,925 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமமாலினி வெற்றி கண்டுள்ளார். 

deol

தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்த சன்னி தியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் ஜக்காரை 82, 452 வாக்குகள் வித்தியாசத்தில்  மண்ணை கவ்வ செய்தார். 

கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் களமிறங்கிய நடிகை சுமலதா, முதல்வர்  குமாரசாமியின் மகன் நிகிலை தோல்வியுறச் செய்துள்ளார்.சுமார் 90, 000 வாக்கு   வித்தியாசத்தில் சுமலதா வென்று சாதனை படைத்துள்ளார்.

jayapradha

அதே நேரத்தில் பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா உத்தரப் பிரதேச மாநிலம் ராம்நகர் தொகுதியில் தோல்வியை அடைந்தார்.சமாஜ்வாடி கட்சியின் அனுபவ அரசியல்வாதியான அசாம்கானுடன் இவர் மோதினார்.ஆரம்பத்தில் ஜெயப்பிரதா முன்னிலை வகித்த  நிலையில் இறுதியில் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அசாம் கான் வெற்றி பெற்றார்.

urmila

அதே போல் அண்மையில் காங்கிரஸில்  இணைந்து வடக்கு மும்பை பகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட  பாஜ வேட்பாளர் கோபால் ரெட்டியிடம்  4 லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றார். 

prakash

நடிகர் பிரகாஷ்ராஜ், பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.  அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரிஸ்வான் அர்ஷத் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.