சினிமாவை பார்த்து ஆட்கடத்தலில் ஈடுபட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் ! கிளைமாக்சில் சிறைக்கு சென்ற பரிதாபம் !

 

சினிமாவை பார்த்து ஆட்கடத்தலில் ஈடுபட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் ! கிளைமாக்சில் சிறைக்கு சென்ற பரிதாபம் !

திருச்சி காந்தி மார்ககெட்டில் தஞ்சை இந்து மகாசபை தலைவர் இளையராஜாவை கடத்தப்பட்ட வழக்கில் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி காந்தி மார்ககெட்டில் தஞ்சை இந்து மகாசபை தலைவர் இளையராஜாவை கடத்தப்பட்ட வழக்கில் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Siva karthikeyan fan

அரசு வேலை பெறுவதற்காக பெரம்பலூர் மாவட்டம் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத் தலைவர் செந்தில்குமார் தஞ்சை மாவட்ட அகில பாரத இந்து மகாசபை தலைவர் இளையராஜா என்பவருக்கு 5 லட்ச ரூபாய்  கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இளையராஜா அரசு வேலை வாங்கி தரததால் பணத்தை திரும்ப தரும்படி இளையராஜாவுக்கு செந்தில்குமார் நெருக்கடி கொடுத்துள்ளார்.

இந் நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்த இளையராஜாவை செந்தில்குமார் மற்றும்  அவரது நண்பர்கள் காரில் கடத்தி சென்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள்  காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காரை விரட்டி சென்ற போலீசார் திருச்சி கும்பகோணத்தான் சாலை அருகே மடக்கி பிடித்தனர். இளையராஜாவை காரில் கடத்திய செந்தில்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக இளையராஜா பணம் பெற்றாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Siva karthikeyan fan

இதுகுறித்து அகில பாரத இந்து மகாசபையின் மாநிலத் தலைவர் ராஜசேகர் பேசியபோது “இளையராஜாவுக்கும் இந்து மகாசபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இளையராஜா மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் எழவே அவரை எங்கள் அமைப்பிலிருந்து நீக்கிவிட்டோம். அவர் மீது ஏராளமான மோசடி புகார்கள் உள்ளது என கூறினார்.

Smuggling

நள்ளிரவில் சூதாட்ட கிளப் ஓனர் கடத்தப்பட்டு கொலை, இந்து முன்னணி நபருக்காக இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம், வேலை வாங்கித் தருவதாக இந்து மகா சபை மாநில நிர்வாகி கடத்தப்படும் சம்பவ என கடந்த ஒருமாதமாக திருச்சி பரபரப்பாகவே காணப்படுகிறது.