சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை!

 

சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை!

முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்று திருவண்ணாமாலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில். அங்கிருக்கும் மலையே சிவ பெருமனாக கருதப்படுவதால், மக்கள் அனைவரும் மலையை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். 14 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த மலையை முழு நிலவு (பௌர்ணமி) அன்று சுற்றி வருவதே உகந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சித்ரா பெளர்ணமியன்று கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது, வரும் மே 6 ம் தேதி இரவு 7.01 மணிக்கு தொடங்கி 7 ம் தேதி மாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. 

ttn

தமிழகம் முழுவதும் கொரோனா  பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளது. அதனால் வரும் 7 ஆம் தேதி கிரிவலம் செல்ல மக்களுக்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலையில்  27 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலே கிரிவலம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.