சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தல்

 

சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தல்

காலிஸ்தான் தலைவர் கோபால் சாவ்லாவை சந்தித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

டெல்லி: காலிஸ்தான் தலைவர் கோபால் சாவ்லாவை சந்தித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் கர்த்தார்ப்பூர் சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பஞ்சாப் மாநில அமைச்சர் நவஜோத் சிங் சித்து பங்கேற்றார். அதே விழாவில், பஞ்சாப்பைத் தனி நாடாக அறிவிக்கக் கோரும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த கோபால் சாவ்லாவும் பங்கேற்றார்.  அந்த விழாவில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில அமைச்சர் சித்துவிடம் காலிஸ்தான் தலைவர் கோபால் சாவ்லா சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை கோபால் சாவ்லா தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இதுகுறித்து நவ்ஜோத் சிங் கூறுகையில், னக்கு காலிஸ்தான் அமைப்பின் தலைவர் யாரென்று தெரியாது. பாகிஸ்தான் சென்றிருந்தபோது, சாவ்லா எனக்குக் கைகொடுத்தார் நான் மகிழ்ச்சி தெரிவித்தேன். மற்றவகையில் நான் கர்தார்பூர் வழித்தடம் நிகழ்ச்சிக்கு மட்டுமே சென்றிருந்தேன் என விளக்கமளித்தார். 

sidhu

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்பிரமணிய சுவாமி, காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் காங்கிரஸைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து சிரித்துப்பேசியது வெளியுலகத்துக்கு தெரிந்தது. ஆனால், சித்து தனக்கு சாவ்லா யாரென்று தெரியாது என்று மறைக்கிறார்.

காலிஸ்தான் அமைப்பின் தலைவர் பற்றித் தெரியாது என்று சித்து கூறுகிறார். என்னைப்பொறுத்தவரை, சித்துவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, அவரிடம் தேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.