சித்திரை மாதத்தில் பிறந்தவார நீங்கள்? அரசு பதவிகளில் நீங்கள் தான் கில்லி !

 

சித்திரை மாதத்தில் பிறந்தவார நீங்கள்? அரசு பதவிகளில் நீங்கள் தான் கில்லி !

சித்திரை மாதம் பிறக்கும் குழந்தைகளின் குண நலன்களை பற்றி இந்த பதிவில் பார்போம்.

சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது நல்லதல்ல. குடும்பத்தை பிரித்துவிடும். தந்தைக்கு கண்டத்தை கொடுக்கும் என்று மேலோட்டமாக நம்ப படுவதால் நாம் திருமண மான புதுமண தம்பதியினரை ஆடி மாதங்களில் பிரித்து வைக்கிறோம். 

 

 

ஏனென்றால் ஆடி மாதத்தில் கர்பம் தரிக்குமேயானால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன் உச்சத்தில் இருப்பார். சூரியன் உச்சம் பெற்றவர்களுக்கு அதிகார குணமும்,பிறரை அடக்கி ஆளும் தன்மையும் இயல்பாகவே இருக்கும். 

ஒரு நாட்டில் பலர் சூரியன் உச்சம் பெற்றிருக்கும் போது பிறந்தால் அனைவருக்கும் அதிகார குணமிருக்கும். அதிகாரமிக்க பதவிகளுக்கும் ஆசைபடுபவர்களாக இருப்பார்கள். இதனால் யாரும் யாரையும் அடக்கி ஆளமுடியாத நிலைமை உண்டாகும்.

 

 

இதனை கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர்கள் சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதர்காகவும் சித்திரையில் குழந்தை பிறப்பை தவிர்பதர்காகவுமே,சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்ற பழமொழியை தெரிவித்துள்ளனர். 

 

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக உடல் உஷ்ணம் ஏற்படுவதால் சில உடல் நல கோளாறுகள் ஏற்படகூடும் என்பது மட்டுமே விஞ்ஞான அடிப்படையில் நிருபிக்கபட்ட உண்மை ஆகும். இதனை தவிர்த்து மக்கள் கூறும் மற்ற பழமொழிகள் எல்லாமே இயற்கைக்கு மாறான ஒன்றாகும்.

பெரிய பெரிய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள்.

சித்திரையில் பிறந்தவர்களுக்கு சமுதாயப் பணிகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.குடும்ப சிந்தனையே இல்லாமல் மற்றவர்களுக்காக உதவும் நல் எண்ணம் கொண்டவர்களாக சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள். 

 

அதனால் தான் பெரிய பெரிய உயர்பதவிகளையும், அரசு பணிகளையும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் பிறர் போற்றும்படி நிர்வாகம் செய்கிறார்கள்.சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் அரசு நிர்வாகத்தில் கொடி கட்டிப் பறப்பார்கள் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.