சித்தாலந்தூர் சிதம்பரம் ஹோட்டல் -அம்பது கிலோ மீட்டர் சுத்தளவுல அடிச்சிக்க ஆளில்லீங்கோ!

 

சித்தாலந்தூர் சிதம்பரம் ஹோட்டல் -அம்பது கிலோ மீட்டர் சுத்தளவுல அடிச்சிக்க ஆளில்லீங்கோ!

திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் போகும் சாலையில் இருக்கிறது சித்தாலந்தூர். அந்த சின்ன கிராமத்தில் இருக்கும் சின்னஞ்சிறு ஹோட்டல் தான் சிதம்பரம் ஹோட்டல். 50 வருடங்களுக்கு மேலாக நடக்கும் இந்த ஹோட்டலின் சிறப்பே அதன் சிம்பிளி சிட்டிதான்!

திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் போகும் சாலையில் இருக்கிறது சித்தாலந்தூர். அந்த சின்ன கிராமத்தில் இருக்கும் சின்னஞ்சிறு ஹோட்டல் தான் சிதம்பரம் ஹோட்டல். 50 வருடங்களுக்கு மேலாக நடக்கும் இந்த ஹோட்டலின் சிறப்பே அதன் சிம்பிளி சிட்டிதான்!

கணவன் மனைவி இரண்டே பேர்.காலை உணவுக்கு இட்லியும் தோசையும் மட்டுமே.மதியம் சோறு.இவ்வளவுதான் மெனு.ஆனால்,திண்டுக்கல், கரூர்,ஈரோடு என்று சுற்றுப்புற நகரங்களில் இருந்தெல்லாம் முன்கூட்டியே ஃபோன் செய்து சொல்லிவிட்டு வருகிறார்கள்.

எதிர் பாராமல் ஆட்கள் வரும்போது உணவுவகைகள் தீர்ந்துவிட்டால் வாசலில் போட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து காத்திருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறார்கள்.ஆச்சரியமாக இருக்கிறதா காரணம் அவர்கள் தரும் சைடிஷ்களின் சுவை அப்படி! அவையும் நீண்ட பட்டியலெல்லாம் இல்லை, மட்டன் வறுவல்,நாட்டுக்கோழி ஃபிரை,குடல் அவளவுதான்.காலை டிஃபனுக்கும் இதுதான்,மதிய உணவுக்கும் இதுதான்.

hotel

கறியானாலும்,கோழியானாலும் இரண்டு அல்லது மூன்று கிலோவுக்கு மேல் சமைப்பதில்லை.நீங்கள் போகும்போது தீர்ந்துவிட்டால் உங்களை காத்திருக்கச்சொல்லிவிட்டு சமைத்து பரிமாறுகிறார்கள்.

இட்லிக்கு தரும் சாம்பார் பொடிமுதல்,ரசப்பொடி,மசாலா பொடிகள் எல்லாம் அவர்களே அரைத்துப் பொடித்து தயாரித்தவை.குக்கர் உணவின் சுவையை குறத்துவிடும் என்பதாலும்,புரோட்டா உடலுக்கு கெடுதி என்பதாலும் அவை இரண்டுக்கும் இங்கே இடமில்லை!

எப்போதும் எல்லாவற்றுக்கும் சின்ன வெங்காயம்தான்.கோழிகளிலும் பிராய்லர் கோழிகளோ ‘கிராஸ்’ கோழிகளோ வாங்குவதில்லை.வீட்டில் வளர்க்கும் நாட்டுக்கோழிகள் மட்டும்தான்.

food

எட்டு மேசைகள் போடலாம் அவளவுதான் இடம் ,நீங்கள் அமர்ந்ததும் இலை போடுகிறார்கள்.நேராக சோறு பரிமாறுகிறார்கள்.கூட்டு,பொரியல், ஊறுகாய், அப்பளம் இதெல்லாம் கண்ணிலேயே காட்டப்படுவது கிடையாது.சோற்றுக்கு கறிக்குழம்பு,அல்லது சிக்கன் குழம்பு தருகிறார்கள்.

சிக்கனும்,மட்டனுமும் கதம்பமும் மட்டுமே ட்ரையாக கிடைக்கின்றன.குடல் கிரேவியாகத்தான் தருகிறார்கள்.எல்லாமே சுவையாக இருந்தாலும்,நீங்கள் தவர விடக்கூடாத காம்போ இதுதான்…முதலில் கிட்டத்தட்ட தண்ணியாக இருக்கும் சிக்கன் குழம்பும்,மட்டன் ஃபிரையும் ஆர்டர் செய்யுங்கள்.அடுத்த ரவுண்டுக்கு குடல் குழம்பை கூப்பிடுங்கள்.அதற்குப்பிறகு நல்ல மனமுள்ள கிராமத்து ரசம்.இதற்கு ஒரு கதம்பம் ஆர்டர் செய்யுங்கள்.இந்த கதம்பம் என்பது ஆட்டின் ஸ்பேர் பார்ட்ஸ்களை கலந்து செய்த தனித்த சுவையுள்ள ஒரு ஐட்டம். தைரியமாகச் சாப்பிடுங்கள். அவர்கள் செக்கில் அறைத்த நல்லெண்ணெய்,கடலெண்ணெய் தவிர வேறு ஒன்றையும் உபயோகிப்பதில்லை. 

food

அதனால், மட்டன் ஒரு பிளேட் 140 ரூபாய்,நாட்டுக்கோழி 130, கதம்பம் 100,குடல் 100,ஆனால் சாப்பாடு அறுபது ரூபாய்தான்.அடுத்தது இந்தக்கோவிலின் தயிர்.தனியாக ரசிகர்களையே வைத்து இருக்கிறது இவர்கள் தரும் எருமை தயிர்.

இனி,இந்தப் பாதையில் போனால் இந்த கிராமத்து உணவகத்தை தவறவிட்டு விடாதீர்கள்.

இதையும் படிங்க: எண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…! என்னய்யா சொல்றீங்க!?