சித்தார்த்தா மாயமானதால் காபி டே பங்கு விலை 20 சதவீதம் அடி வாங்கியது

 

சித்தார்த்தா மாயமானதால் காபி டே பங்கு விலை 20 சதவீதம் அடி வாங்கியது

கபே காபி டே குழுமத்தின் நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா நேற்று மாலை முதல் மாயமானதால் காபி டே பங்கு விலை 20 சதவீதம் விலை குறைந்தது.

இந்தியாவின் பிரலப சங்கிலி தொடர் காபி நிறுவனமான கபே காபி டே குழுமத்தின் தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி. சித்தார்த்தா நேற்று மாலை முதல் காணவில்லை. பாலத்தில் இருந்து நேத்ராவதி ஆற்றில் சித்தார்த்தா குதித்ததாக அவரது கார் டிரைவர் கூறினார். இதனையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எஸ்.எம்.கிருஷ்ணா

சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், காபி டே என்டர்பிரைசஸ் நிறுவனம் சித்தார்த்தாவை, நேற்று மாலை முதல் காணவில்லை என்ற தகவலை பங்குச் சந்தை அமைப்பிடம் இன்று தெரிவித்தது. இதனையடுத்து காபி டே என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு விலை கடும் சரிவை சந்தித்தது.

வி.ஜி.சித்தார்த்தா

நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது காபி டே என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.192.55ஆக இருந்தது. ஆனால் இன்று காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கும் போது அந்த பங்கு விலை 19.99 சதவீதம் சரிந்து ரூ.154.05க்கு வர்த்தகம் ஆனது. காபி டே என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.