சித்தர்களின் குறி சொல்லும் முறை எப்படிப்பட்டது ?

 

சித்தர்களின் குறி சொல்லும் முறை எப்படிப்பட்டது ?

சித்தர்கள் பயன்படுத்தி வந்த குறி சொல்லும் முறைகளை பற்றியும் குறி சொல்லும் முறையில் கடைபிடிக்கபடும் வழிமுறைகள் பற்றியும் பார்போம்.

பொதுவாக குறி சொல்லும் முறை என்பது கிராமங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த முறையாகும்.

siddthargal

ஒருவர் நம் முன்னால் உட்கார்ந்த உடன் தெய்வத்தின் அருளால் அவர் எதற்கு வந்திருக்கிறார், என்ன நடக்கும், என்ன பாதிப்பு, என்ன தீர்வு என்று மிக தெளிவாக அவர்களுக்கு கூற முடியும் முறையாக குறி சொல்லும் முறை இருந்து வந்துள்ளது.

பண்டைய தமிழர்கள் வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது.

வெறுமென கையையும், முகத்தையும் பார்த்தே ஒருவரது எதிர்காலத்தை பற்றி இந்த குறி சொல்லும் முறையில் கூறப்படுகிறது.

சீனா, எகிப்து, ஐரோப்பிய, ஆப்ரிக்கா என பல உலக நாடுகளில் பண்டையக் காலத்தில் இருந்தே இவை பின்பற்றப்பட்டு வந்து இருக்கின்றனர்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையில் எதிர்காலத்தை பற்றி குறி சொல்லுவது நடைமுறையில் இருந்துள்ளது.

pulipaani

பண்டைய கிரேக்க முறையில் குறி சொல்வதற்கு  பகடை முறை பின்பற்றப்பட்டுள்ளது. ரோமர்கள் இதை தலி என்று கூறிவந்துள்ளனர். நான்கு பகடைகளை ஒரே நேரத்தில் உருட்டி அதில் விழும் எண்களை வைத்து குறி கூறப்பட்டுள்ளது. 

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அந்த வழிமுறைகளில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை பார்போம்.

பாரடா ஆடையொட்ட சமூமைப்பா
பண்பான நின்றிடந் தீஞ்சமூலி
சேரடா கருச்சீலை யிந்த மூன்றும்
செம்மையாய் கருக்கியல்லோ மைபோலாட்டி
சீரடா சுடலையென்ற தயிலஞ் சேர்த்துச்
ஈஷ வீரடா அனுமாரை தியானஞ் செய்து
விதமாகத் திலகமிட்டுக் குறிதான் சொலே.

pulipaani

சொல்லடா அஞ்சனாதேவி புத்ரா
சொகுசான வாயுமைந்தா புருஷரூபா
வல்லவா அனுமந்தா ராம தூதா
வந்துகுறி சொல்லென்று வணங்கி கொள்ளு
இல்லப்பா நினைத்ததெல்லாஞ் சொல்வான் பாரு
என்னசொல்வே னவனுடைய குறிதான் மைந்தா
நல்லப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

– புலிப்பாணி சித்தர் 

ஆடையொட்டி சமூலம், தீஞ்சமூலி, கருப்புத் துணி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து எரித்து கருக்கி, அதனை கல்வத்தில் இட்டு சுடலைத் தைலம்வார்த்து நன்கு மைபோல அரைத்து அதனை ஒரு மைபதமானதும் அதில் சுடலைத் தைலம் சேர்த்து நன்கு அரைத்து சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.  

murugaa

பின்னர் குறிசொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து “அஞ்சனா தேவி புத்திரா வாயு மைந்தா புருஷரூபா வல்லவா அனுமந்தா இராம தூதா வந்து குறி சொல்லு” என்ற மந்திரத்தினை செபித்து மையினைத் திலகமாக இட்டு குறி சொல்ல வேண்டுமாம். 

அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம்.இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார் புலிப்பாணி சித்தர் .