சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வருகின்ற14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வருகின்ற14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமாக கருதப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுபெருவிழாவாக கருதப்படும் ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி தொடங்குகிறது.

கடலுார்:

ஆருத்ரா என்னும் திருவாதிரை நட்சத்திரத்துக்கு சிவனே அதி தேவதை ஆவார். பதஞ்சலி முனிவருக்கும் வியாக்கிரபாதருக்கும் நடராஜப் பெருமான் தம்முடைய நடனத்தை ஆடிக்காட்டியதே இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் தான்.

natarajar

இத்தகைய பெருமைகள் வாய்ந்த இந்த மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் தான் ஆருத்ரா தரிசன விழா சிதம்பரத்தில் நடைபெறுகிறது. 

 சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜ பெருமானுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் .

இந்தாண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் மாதம் 14ம் தேதி காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
 

natarajar

ஆருத்ரா தரிசன விழாவின் தொடக்க நிகழ்வாக டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி கொடி மரத்திற்கு விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாக 14ம் தேதி காலை சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாக பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு பிரகாரம் வலம் வந்து கொடிமரம் சன்னதியில் எழுந்தருளுவர்.அ

natarajar11

தனையடுத்து  கொடி மரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் நடராஜ தீட்சிதர் சிறப்பு பூஜைகள்,பன்னிரு திருமுறை வழிபாடு நடைபெற்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து தினமும், சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

அதனையடுத்து 5ம் நாளான 18ம் தேதி தெருவடைச்சான் தேரோட்டம், 9ம் நாளான 22ம் தேதி நடராஜர் மார்கழி ஆருத்ரா திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

siva

அன்றைய தினம் மாலை சுவாமி தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜசபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

அன்று இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை, அதிகாலை 2:00 மணிக்கு சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 

மறுநாள் 23ம் தேதி காலை ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று மதியம் 2:00 மணிக்கு மகா தரிசனம் சித்சபை பிரவேசம் நடைபெறுகிறது.