சிதம்பரம் கேட்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்! – ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்றம் அதிரடி

 

சிதம்பரம் கேட்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்! – ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்றம் அதிரடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சுவர் எகிறி குதித்து சி.பி.ஐ அதிரடியாக கைது செய்தது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கப் பிரிவு திடீரென்று கைது செய்தது. தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீட்டை அனுமதித்த வழக்கில் ப.சிதம்பரம் கேட்கும் ஆவணங்களை வழங்கும்படி சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

p-chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சுவர் எகிறி குதித்து சி.பி.ஐ அதிரடியாக கைது செய்தது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கப் பிரிவு திடீரென்று கைது செய்தது. தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். ஆனால் அதை எல்லாம் தர முடியாது என்று சி.பி.ஐ கூறி வந்தது. அனுமதி வழங்கிய அமைப்பின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களை எல்லாம் விட்டுவிட்டு, நிதி அமைச்சராக இருந்த என் மீது வழக்கு தொடரப்பட்டது ஏன் என்று ப.சிதம்பரம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், வழக்கை எதிர்கொள்ளக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை தரும்படி கேட்டது. ஆனால், இதைத் தர சி.பி.ஐ மறுத்துவிட்டது.
தனக்கு தேவையான ஆவணங்களை சி.பி.ஐ வழங்க உத்தரவிட வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையுடன், ப.சிதம்பரம் கேட்ட சில ஆவணங்களை வழங்கும்படி சி.பி.ஐ-க்கு நீதிபதி குஹர் உத்தரவிட்டார்.