சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 

சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரத்திற்கு 74 வயதாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றார்.

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் ஒருநாள் நீட்டிக்கப்பட்ட நிலையில், அவரை திஹார் சிறைக்கு அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழங்கிய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ள சிபிஐ கடந்த 12நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. மேலேயும்  ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

chithambaram

இதை எதிர்த்து சிதம்பரம் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் சிதம்பரம் வழக்கறிஞர் கபில் சிபல்,  சிதம்பரத்திற்கு 73 வயதாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு, சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பக் கூடாது என்றும்  இடைக்கால ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறு சிதம்பரம் தரப்பையும், அவரது கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவேளை சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்தால், அவரை வரும் 5ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்குமாறும் கூறி வழக்கை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

chithambaram

இந்நிலையில் 3 நாள் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ ஆஜர்படுத்தியது. அப்போது இருதரப்பு வாதத்தையும் கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர், சிதம்பரத்திற்கு ஒரு நாள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் இன்று பிற்பகல் 3.50 மணிக்கு இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிப்பதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.