சிதம்பரத்துக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என நம்புகிறோம்… சல்மான் குர்ஷித்

 

சிதம்பரத்துக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என நம்புகிறோம்… சல்மான் குர்ஷித்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என நாங்கள் நம்புகிறோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் கூறினார்.

சிதம்பரத்துக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என நம்புகிறோம்… சல்மான் குர்ஷித்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு ராகுல், பிரியங்கா காந்தி  என காங்கிரசை சேர்ந்த பல தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என நாங்கள் நம்புகிறோம் என காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் கூறினார்.

ப.சிதம்பரம் கைது தொடர்பாக சல்மான் குர்ஷித் கூறியதாவது: நிகழ்ந்த சம்பவங்கள் (ப.சிதம்பரம் கைது) ஆழமான துன்பத்தை கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றம் நாளை என்ன செய்ய போகிறது என்பதை பார்க்கும் வரை காத்திருக்க வேண்டும். சிதம்பரத்துக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என நாங்கள் நம்புகிறோம். மக்களின் உரிமை என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசுதான் இதனை செய்துள்ளது.

பா.ஜ.க.

இந்த கைது நடவடிக்கையை பா.ஜ.க. தூண்டிவிட்டுள்ளது. இது போன்ற சட்ட சிஸ்டத்தையா நாம் ஆதரிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அவசரநிலை மற்றும் மக்களின் உரிமை பறிக்கப்பட்டது குறித்து அனைவரும் பேசுகின்றனர். இப்படிதான் அவர்கள் தொடரப்போகிறார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.