சிதம்பரத்தில் போட்டியிடுகிறார் திருமாவளவன்: உற்சாகத்தில் விசிக தொண்டர்கள்!

 

சிதம்பரத்தில் போட்டியிடுகிறார் திருமாவளவன்: உற்சாகத்தில் விசிக தொண்டர்கள்!

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

வேலூர்: மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி விட்டன. கூட்டணி தொடர்பான அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் கடும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

thirumavalavan TTN

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் தலைமையின் கீழ் கூட்டணி அமைகிறது. அதிமுக – பாஜக மற்றும் பாமக தொகுதிகள்  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்குப்  புதுச்சேரியில் ஒரு தொகுதி, தமிழகத்தில் 9 தொகுதிகள் என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

thirumavalavan 2 TTN

இந்நிலையில் வேலூர் காட்பாடி விருதம்பட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘எங்களுக்கு வேண்டிய தொகுதிகளை தி.மு.கவிடம் கேட்டுள்ளோம். நான்  நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன்’ என்றார். இதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.