சிதம்பரத்தின் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க சி.பி.ஐ க்கு நோட்டீஸ்: மனுவை திரும்பப் பெற்றார் சிதம்பரம்

 

சிதம்பரத்தின் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க சி.பி.ஐ க்கு நோட்டீஸ்: மனுவை திரும்பப் பெற்றார் சிதம்பரம்

ப.சிதம்பரத்தின் மனுவிற்கு 7 நாட்களில் பதிலளிக்க சி.பி.ஐ க்கு நோட்டீஸ் அளித்துள்ளது உச்ச நீதி மன்றம். தான் அளித்த மனுவை திரும்பப் பெற்றார் சிதம்பரம்.

ப.சிதம்பரத்தின் மனுவிற்கு 7 நாட்களில் பதிலளிக்க சி.பி.ஐ க்கு நோட்டீஸ் அளித்துள்ளது உச்ச நீதி மன்றம். 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்பரம் 15 நாட்களுக்கு திகார் சிறையில் அடைக்கப் பட்டார். அவர் ஜாமீன் கேட்டு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று உச்சநீதி மன்றத்தில் அந்த மனு விசாரணைக்கு வந்தது.  சிதம்பரத்தின் ஜாமீன் மனுவிற்கு 7 நாட்களில் பதிலளிக்குமாறு  சி.பி.ஐ க்கு நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதி மன்றம்.மேலும் சிதம்பரம் மீதான ஜாமீன் மனு செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தன்னை கைது செய்தது தவறு என கூறிய ப.சிதம்பரம், இன்று மனு விசாரணையில் உச்ச நீதி மன்றம், கீழ் நீதிமன்றங்களை அணுகாமல் நேரடியாக மேல் நீதிமன்றத்துக்கு மனு அளித்தது ஏன் என கேள்வி எழுப்பிய நிலையில், ப.சிதம்பரம் தான் அளித்த ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.