சிட்கோ நில ஆக்கிரமிப்பு வழக்கு : மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

 

சிட்கோ நில ஆக்கிரமிப்பு வழக்கு : மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மேயரான மா.சுப்பிரமணியன், சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிலாளர் குடியிருப்புகளைப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளதாக அவரின் மீதும் அவரது மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Subramaniyan

அதில், கடந்த ஜூன் மாதம் இந்த நிலம் ஆக்கிரமிக்கப் பட்டது இல்லை. 28 ஆண்டுகளாக  இங்கே வசித்து வருகிறோம் என்று மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டார். ஆனால், பார்த்திபன் என்பவர் வழக்குப் பதிவு செய்ததன் பேரில் சென்னை உயர்நீதி மன்றம் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வந்தது. 

Subramaniyan

சிட்கோ நில ஆக்கிரமிப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, இந்த வழக்கின் புலன் விசாரணையை மேற்கொண்ட  சிபிசிஐடி காவல்துறையினர் ஆவணமோசடி, ஏமாற்றுதல், கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவின் கீழ்,  மா.சுப்பிரமணியன் மீதும் அவரது மனைவி மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.