சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளன: சென்னை காவல் ஆணையர் தகவல்!

 

சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளன: சென்னை காவல் ஆணையர் தகவல்!

கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் வந்துள்ளதால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன என்று  சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை: கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் வந்துள்ளதால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன என்று  சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை சென்னை முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர போக்கு வரத்துக் காவல்துறை சார்பில் வட சென்னையில் ராயபுரம் முதல் எண்ணூர் வரையில் 25 கி.மீ. தூரத்துக்கு 998 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘சென்னை மாநகரில் ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை ஓர் இயக்கமாகச் செய்து வருகிறோம். பல்வேறு அமைப்புகளும் தனி நபர்களும் இதற்கு உதவி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் வந்துள்ளதால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றங்களைக் குறைப்பதிலும் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதிலும் இப்போது பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் தாங்கள் கண்காணிப்பு கேமராவில் கண்காணிக்கப்படுகிறோம் என்ற பயத்துடன் உள்ளனர். குற்றவாளிகளுக்குக் கண்காணிப்பு கேமரா அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது’ என்று கூறினார்.