‘ சிங்கிள் பசங்க’ பாடல் மூலம் மீண்டும் அனைவரையும் வசீகரித்த ‘ஹிப்ஹாப்’ ஆதி

 

‘ சிங்கிள் பசங்க’ பாடல் மூலம் மீண்டும் அனைவரையும் வசீகரித்த ‘ஹிப்ஹாப்’ ஆதி

ஹிப்ஹாப் ஆதி தனது சிங்கிள் பசங்க பாடல் மூலம் மீண்டும் தனது ரசிகர்களை வசீகரித்துயுள்ளார்

சென்னை: ஹிப்ஹாப் ஆதி தனது சிங்கிள் பசங்க பாடல் மூலம் மீண்டும் தனது ரசிகர்களை வசீகரித்துயுள்ளார்.  

தன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற்று இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி. அந்த வரிசையில் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் அவ்னி மூவிஸ் சுந்தர்.சி தயாரிப்பில்  சமீபத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் ‘கேரளா சாங்’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. இதில் ஆதிக்கு ஜோடியாக அனகா நடிக்கிறார்.

இந்நிலையில், அப்படத்தின் இரண்டாவது பாடலான   ‘சிங்கிள் பசங்க’ என்று தொடங்கும் பாடலை யூடியூப், மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. இப்பாடல்   எளிமையாகப் புரியும் வகையில் உள்ளதால் அனைவரும்  ரசிக்கும் படி அமைந்து உள்ளது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி.