சிங்கம் 4 எடுத்தா, இந்த கேரள பெண் ஐபிஎஸ் அதிகாரிதான் ஹீரோ!

 

சிங்கம் 4 எடுத்தா, இந்த கேரள பெண் ஐபிஎஸ் அதிகாரிதான் ஹீரோ!

தேவையான ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு, எந்த ஜூனியர் அதிகாரியையும் அனுப்பாமல் ஒரு சிறு குழுவுடன் கிடைத்த அடுத்த ஃப்ளைட் ஏறிவிட்டார். ஃபார்மாலிட்டிகளை முடித்துக்கொண்டு, இரண்டே நாட்களில் சுனிலை கொத்தோடு அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கேரளம், கொல்லத்தில் 13 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார். சிறுமியின் தற்கொலைக்கு சில வாரங்களுக்கு முன்பு சிறுமியின் உறவினர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டிருந்தார். இருவரின் அகால மரணத்துக்கும் காரணமான சுனில் குமார் என்னும் காமவெறியன் அப்போது ஹாய்யாக சவுதியில் கூலி வேலை செய்துகொண்டிருந்தான். நடந்தது இதுதான், 2017ஆம் ஆண்டு துவக்கத்தில் கேரளா திரும்பிய சுனில் குமாரை, அவனுடைய நண்பர் ஒருவர் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு எதேச்சையாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

Sunil Kumar

இதன்பின்னர், தொடர்ச்சியாக 3 மாதங்கள் அச்சிறுமியை மிரட்டி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கிறான் சுனில். ஒருகட்டத்தில் தாங்கமுடியாத சிறுமி பெற்றோரிடம் சொல்ல, சுனிலை அறிமுகம் செய்த உறவினரிடம் பெற்றோர் சண்டைபோட, சுனில் உடனடியாக சவுதிக்கு பறந்துவிட்டான். கேரளாவை உலுக்கிய இந்த நிகழ்வின் இறுதியில், சுனிலை அறிமுகப்படுத்திய குற்றத்திற்காக அந்த உறவினர் தன்னையே மாய்த்துக்கொள்ள, தன் வாழ்க்கை வீணானதை அறிந்த சிறுமியும் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.

Merin Joseph, IPS

சுனிலைத் தேடி இன்டர்போல் அமைப்புக்கும் தகவல் தெரிவித்துவிட்டாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக, கொல்லத்தின் கமிஷனராக ஜூன் மாதம் பதவியேற்றுக்கொண்டார் மெரின் ஜோசப் ஐ.பி.எஸ். பதவியேற்ற பத்து நாட்களுக்குள் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து, முக்கியமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் குறித்து விசாரித்தார். சிறுமி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டு தப்பியோடிய சுனில் விவகாரம் மெரினுக்கு தெரியவருகிறது. உடனடியாக இன்டர்போலை தொடர்புகொண்டு, “எங்களுக்கு சுனில் இப்பவே வேணும்” என கண்டிப்புடன் கேட்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் சுனிலை கஸ்டடியில் கொண்டுவந்த சவுதி போலிஸ், மெரினுக்கு தகவல் தெரிவிக்கிறது.

Singam 4

தேவையான ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு, எந்த ஜூனியர் அதிகாரியையும் அனுப்பாமல் ஒரு சிறு குழுவுடன் கிடைத்த அடுத்த ஃப்ளைட் ஏறிவிட்டார். ஃபார்மாலிட்டிகளை முடித்துக்கொண்டு, இரண்டே நாட்களில் சுனிலை கொத்தோடு அள்ளிக்கொண்டு வந்துவிட்டார். ஒருவேளை சிங்கம் 4 எடுத்தாங்கன்னா, சூர்யாவுக்கு ரெஸ்ட் குடுத்துட்டு, மெரீனையை நடிக்க வைக்கலாம். இயக்குநர் ஹரி ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் எடிட்டிங்க்ல காட்டுற வேகத்தை நிஜத்துலயே காட்டுற மெரின் ஐ.பி.எஸ்.தானே சரியான சாய்ஸ்?