சிங்கம் பசியோடு இருந்தாலும் இருக்குமே தவிர, ஒரு போதும் புல்லை சாப்பிடாது- சிவ சேனா குறித்து பா.ஜ. அமைச்சர்

 

சிங்கம் பசியோடு இருந்தாலும் இருக்குமே தவிர, ஒரு போதும் புல்லை சாப்பிடாது- சிவ சேனா குறித்து பா.ஜ. அமைச்சர்

சிங்கம் பசியோடு இருந்தாலும் இருக்குமே தவிர, ஒரு போதும் புல்லை சாப்பிடாது. அது மாதிரிதான் சிவ சேனா காங்கிரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என பா.ஜ. அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய போதிலும் அடுத்த ஆட்சி அமைப்பதில் பெரும் போராட்டமே நடந்து வருகிறது. முதல்வர் பதவியை எங்களுக்கும் கொஞ்சம் தர வேண்டும் என சிவ சேனா வலியுறுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ.க. அது எல்லாம் முடியாது என கூறுகிறது. இதனால் அந்த மாநிலத்தில் புதிய அரசு அமையுமா என்ற கேட்க கூடிய அளவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே

இதற்கிடையே பா.ஜ.க. முதல்வர் பதவியை விட்டு தராவிட்டால் வேறு வழியில் ஆட்சி பிடிப்பதற்கும் சிவ சேனா தயாராக இருப்பதாக தெரிகிறது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி சிவ சேனாவுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,  மகாராஷ்ரா அமைச்சர் சுதிர் முன்கண்டிவார் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணியிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவார் என பிரதமர் நரேந்திர மோடி சட்டப்பேரவை தேர்தலின் போது அறிவித்தார். இந்த கூட்டணியிலிருந்துதான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார். 

காங்கிரஸ்

உத்தவ் தாக்கரே பெரிய மனது படைத்தவர். தாக்கரே குடும்பம் எப்போதும் அதிகார பசியில் இல்லை. சிங்கம் பசியோடு இருக்குமே தவிர ஒரு போதும் புல்லை சாப்பிடாது. அது மாதிரிதான் ஆட்சி அதிகாரத்துக்காக சிவ சேனா ஒரு போதும் காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என தெரிவித்தார்.