சிங்கப்பூர் இந்திய வம்சாவழி குத்துச்சண்டை வீரர் மர்ம மரணம், விசாரணை அறிக்கை தாக்கல்.

சிங்கப்பூர் இந்திய வம்சாவழி குத்துச்சண்டை வீரர் மர்ம மரணம், விசாரணை அறிக்கை தாக்கல்.

சிங்கப்பூரில் உள்ளூர் ஆனழகன் போட்டிகளில் வென்று பிரபலமானவர் பிரதீப் சுப்பிரமணியன். சிங்கப்பூர் விளையாட்டுக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் சுப்பிரமணியன் முதன் முதலாக தாய் கிக் பாக்சிங் போட்டியில் கலந்து கொள்ளத் தீர்மானித்தார்.

அது சிங்கப்பூரில் வழக்கமாக நடக்கும் பிரபலங்களுக்கான குத்துச்சண்டைப் போட்டி.2017 செப்டம்பர் 23-ம் தேதி தன் வாழ்க்கையின் முதல் குத்துச்சண்டைப் போட்டியில் யூட்யூப் பிரபலமான ஸ்டீவன் லிம் என்பவருடன் பிரதீப் மோதினார். அந்தப் போட்டி 5 நிமிடம் மட்டுமே நீடித்தது.ஆரம்பத்தில் வென்று விடுவார் என்று கருதப்பட்ட பிரதீப் தலையில் லிம் மூன்று குத்துகள் விட்டபிறகு தளர்ந்து விட்டார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழியத் துவங்கியது.நடுவர் போட்டியில் லிம் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

pratip subramaniyan 09

பிரதீப் தனக்கான பதக்கத்தைப் பெற்றுக்கொண்டு நகர்ந்த பிரதீப் அரங்கின் மூலையில் சரிந்து விழுந்தார்.அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதீப் அன்றிரவு 9.45 மணிக்கு மரணமடைந்தார். இது சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது. பிரதீப் மரணம் குறித்த விசாரணையை நடத்திய அதிகாரி கமலா பொன்னம்பலம் நேற்றுத் தனது அறிக்கையை வெளியிட்டார்.அதன்படி குத்துச் சண்டை துவங்கும் முன் லிம்,பிரதீப் இருவரையும் ஒரு டாக்டர் பரிசோதித்து அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகச் சான்று அளித்திருக்கிறார். அதன் பிறகு தான் குத்துச்சண்டைப் போட்டி நடந்திருக்கிறது. 

pratip-subramnain

மரணத்திற்கு பிறகு நடந்த தடயவியல் சோதனையில் பிரதீப் மாரடைப்பால் இறந்ததாக தெரிகிறது என்று சொல்லி இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாகப் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த வழக்கு இந்த அறிக்கையின் மூலம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.