சிங்கப்பூரில் சீர்கெடும் ஆரோக்கியம்! வீட்டிற்குள்ளேயே இருங்கள் பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!

 

சிங்கப்பூரில் சீர்கெடும் ஆரோக்கியம்! வீட்டிற்குள்ளேயே இருங்கள் பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!

இந்தோனேசியாவில் சுமத்ரா, கலிமந்தன் மற்றும் போர்னியோ உள்ளிட்ட தீவுகளில், கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ நிலவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையாக காற்று மாசுப்பட்டுள்ளது.  வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைப்பதற்காக சுமார் 239 மில்லியன் தண்ணீர் அளவு இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுவரை  5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. 

indonesia

இந்நிலையில், இந்தோனிஷியாவில் பற்றி எரியும் தீயின் தாக்கம், அதன் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் உணரப்பட்டு வருகிறது. மலேசியாவுக்கு உட்பட்ட 16 மாநிலங்களில் 11 மாநிலங்களின் காற்றின் தரக்குறியீடு 101 முதல் 200 ஆக குறைந்து மிகமோசமான நிலை நீடித்து வருகிறது. அதே போல் சிங்கப்பூரிலும், காற்றின் தரக்குறியீடு 151 ஆக குறைந்து, மோசமான நிலையை உணர்த்தியுள்ளது. இதையடுத்து காற்றின் தரம் சீராகும் வரை பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள் நேரத்தை செலவிடும்படி சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.

malaysia-singapore sumatra effect
சாதாரணமாக காற்று மாசுபாடு குறியீடானது, ஒன்று முதல் ஐம்பது புள்ளிகள் வரை இருப்பின் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது எனக் கருதப்படுகிறது. ஐம்பது முதல் நூறு புள்ளிகள் வரை இருப்பின் அது மிதமான பாதிப்பாகவும், 150 முதல் 200 புள்ளிகள் வரை இருப்பின் அது உடல்நலத்தைப் பாதிக்கும் என்றும், 200 புள்ளிகளைக் கடந்து விட்டால் அது மிக ஆபத்தானது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. 300 புள்ளிகள் என்பது உயிருக்கே உலை வைத்துவிடக் கூடிய அளவாகும். சிங்கப்பூரில் காற்றின் தரம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆரோக்கியமற்ற வரம்பிற்குள் நுழையக்கூடும் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.