சிங்கப்பூரில் ஆயிரம் டாலர் நோட்டுகளுக்கு தடை

 

சிங்கப்பூரில் ஆயிரம் டாலர் நோட்டுகளுக்கு தடை

சிங்கப்பூரில் ஆயிரம் டாலர் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த தடை அமலுக்கு வருகிறது.

சிங்கப்பூரில் ஆயிரம் டாலர் நோட்டுகளுக்கு தடை

அதுவரையிலும் ஒட்டுமொத்தமாக டாலர் தட்டுப்பாடு இல்லாமல் படிப்படியாக குறைப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது முதல் டிசம்பர் இறுதி வரையிலும் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆயிரம் டாலர் நோட்டுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிங்கப்பூரின் ஆயிரம் டாலர் என்பது இந்திய மதிப்பில் 54,501 ரூபாய் ஆகும்.
பண மோசடியை தடுப்பதற்காகவும், பயங்கரவாத நிதி அபாயங்களை எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரிக்கு முன்னதாக வங்கியில் வரவு கைப்படும் ஆயிரம் டாலர் நோட்டுகளை வங்கிகள் தொடர்ந்து புழக்கத்தில் விடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயிரம் டாலர்கள் நிறுத்தப்பட்ட பின்னர் 100 டாலர் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.