சிங்கப்பூரின் திடீர் வீழ்ச்சி உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- பன்னாட்டு நிதியம் தகவல்…

 

சிங்கப்பூரின் திடீர் வீழ்ச்சி உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- பன்னாட்டு நிதியம் தகவல்…

சிங்கப்பூர் பொருளாதார வீழ்ச்சி, சீனாவின் ஏற்றுமதி சரிவு போன்றவை உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என பன்னாட்டு நிதியம் கூறுகிறது.

சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் என்ஜினாக ஆசியா விளங்குகிறது. மேலும் உலக பொருளாதாரத்தில் 60 சதவீத பங்களிப்பை ஆசிய நாடுகள் தங்கள் வசம் வைத்துள்ளன. ஆக, ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டால் மட்டுமே உலக பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி காணும். இந்நிலையில், சில ஆசிய நாடுகளின் வீழ்ச்சி சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பன்னாட்டு நிதியம்

பன்னாட்டு நிதியம் இது குறித்து கூறியிருப்பதாவது: சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) சற்று எதிர்பாராத வகையில் 3.4 சதவீதமாக குறைந்தது. இது, 2012ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். கடந்த ஜூன் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 1.3 சதவீதம் குறைந்தது. மேலும் அந்த மாதத்தில் அந்நாட்டின் இறக்குமதி எதிர்பார்த்ததை காட்டிலும் 7.3 சதவீதம் குறைந்தது.

தென்கொரியாவின் பொருளாதாரமும் ஏற்கனவே சரிவு கண்டுள்ளது. இந்நிலையில், நாளை சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் வெளிவருகிறது. அந்த புள்ளிவிவரம் பொருளாதாரம் பலகீனமாக இருப்பதை தெளிவாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்குகள் ஏற்றுமதி

சிங்கப்பூரின் திடீர் பொருளாதார வீழ்ச்சி, சீனாவின் ஏற்றுமதி சரிவு போன்றவை உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.