சிக்ஸர் படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி 

 

சிக்ஸர் படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி 

க்ஸர் படக்குழுவுக்கு நடிகர் கவுண்டமணி  வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

சென்னை: சிக்ஸர் படக்குழுவுக்கு நடிகர் கவுண்டமணி  வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

வால்மேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள சிக்ஸர் படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சாக்‌ஷி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி உருவாகியுள்ள இதில் வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். ராதா ரவி, இளவரசு, சதீஷ், ராமர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

goundamani

இந்த நிலையில் இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும்  பயன்படுத்தியுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர்கள், தினேஷ் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

goundamani

நாளை வெளியாகவுள்ள இந்த படத்தின் மீது கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் இந்த படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

goundamani