சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக 3 ஆண்டுகளாக செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்….

 

சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக 3 ஆண்டுகளாக செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்….

பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் நிழல் உலக தாதாக தாவூத் இப்ராஹிம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறாராம். போனை பயன்படுத்தினால் தான் எங்கே இருக்கிறோம் என்பதை இந்திய அரசு கண்டுபிடித்து விடும் என்ற பயமே இதற்கு காரணம் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாக பிறந்தவர்தான் தாவூத் இப்ராஹிம். எட்டு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் என பெரிய குடும்பத்தில் தாவூத் இப்ராஹிம் இருந்தாலும், சிறு வயது முதலே கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் குற்றவாளியாக அவர் வளர்ந்தார். சின்ன சின்ன தவறுகள் செய்து வந்த தாவூத் இப்ராஹிம் ஒரு கட்டத்தில் சர்வதேச அளவிலான போதை பொருட்கள், ஆயுதங்கள் கடத்தல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற தொடங்கினார்.

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு

1993ல் மும்பை நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது தாவூத் இப்ராஹிம். இங்கிருந்தால் போலீஸ் உள்ளே தூக்கி போடும் என்பதை உணர்ந்த தாவூத் பாகிஸ்தானுக்கு தப்பியோடி தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தலைமறைவாக வாழந்து வந்தாலும் தனது கிரிமனல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுதான் இருக்கிறார். பாகிஸ்தானில் கராச்சி நகரில் தாவூத் இப்ராஹிம் தலைமறைவாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாவூத் இப்ராஹிம்

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தாவூத் இப்ராஹிம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி நீராஜ் குமார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தாவூத் இப்ராஹிம் போன்  உரையாடலை கடைசியாக 2016 நவம்பரில் டிராக் செய்தோம். அப்போது இந்தியாவில் உள்ள டி நிறுவனத்தின் தலைவரிடம் சுமார் 15 நிமிடங்கள் தாவூத் பேசினார். பேசும் சமயத்தில் வார்த்தைகள் தடுமாறியது அதனால் அந்த நேரத்தில் தாவூத் குடித்து இருந்திருப்பார் என தெரிகிறது. ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கிய சில வீரர்கள் குறித்து டி நிறுவனத்தின் தலைவரிடம் விசாரித்தார். அதன்பிறகு அவர் செல்போனை பயன்படுத்துவதை தவிர்த்து இருக்கலாம். தாவூத் இப்ராஹிமும் அவனது கூட்டமும் இன்னமும் கராச்சியில்தான்  இருக்கிறது என்பதை ரகசிய தகவல்கள் உறுதி செய்கின்றன என தெரிவித்தார்.