‘சிக்கன் பிரியாணியில் கிடந்தது சிக்கன் இல்லை’ : ஜொமோட்டோ வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 

‘சிக்கன் பிரியாணியில் கிடந்தது சிக்கன் இல்லை’ :  ஜொமோட்டோ வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதில் ஜொமோட்டோ  நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி மூக்கை உடைத்து கொள்ளும்.   

இந்தியா முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சேவையில் உபர், ஸ்விகி, ஜொமோட்டோ   ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜொமோட்டோ  நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி மூக்கை உடைத்து கொள்ளும்.   

ttn

அந்த வகையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் ஜொமோட்டோ மூலம்  குகத்பல்லி என்ற ஹோட்டலில் சிக்கன் பிரியாணியை கடந்த 15 ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார். சில மணிநேரத்தில் பிரியாணி வீட்டுவாசலுக்கு வர, கடுமையான பசியிலிருந்த அவர், ஆசை ஆசையாக பிரியாணியை திறந்து சாப்பிட்டுள்ளார்.

ttn

அப்போது வாயில் ஏதோ  தட்டுப்பட்டுள்ளது. என்னவென்று எடுத்த பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  காரணம் அதில் வயரில்  வரும் கம்பி ஒன்று இருந்துள்ளது.  இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து தெலுங்கானா மாநில நுகர்வோர் தகவல் மற்றும் நிவாரண மையமும் இந்த சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு, ஸ்ரீனிவாஸிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. இதை தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகத்தைச் சோதனை செய்து 5,000 அபராதம் விதித்தனர். மேலும் இதுகுறித்து ஜொமோட்டோ நிறுவனமும்  வாடிக்கையாளர் ஸ்ரீனிவாஸிடம் ,மன்னிப்பு கேட்டதுடன்  அவருக்கு சில சலுகை கூப்பன்களை  வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.