சிகரெட் விற்பது போல சீக்ரெட்டாக விற்ற கஞ்சா -பெட்டிக்கடையில் மாட்டிய தம்பதிகள்.. 

 

சிகரெட் விற்பது போல சீக்ரெட்டாக விற்ற கஞ்சா -பெட்டிக்கடையில் மாட்டிய தம்பதிகள்.. 

பிறகு ஒரு மப்டி போலீஸ் அந்த கடையில் சென்று கஞ்சா கேட்க அங்கிருந்த பெண்மணியும்  கஞ்சா கொடுக்கும்போது சிக்கிக்கொண்டார்.அந்த கடையில் அவர்கள் ரெகுலர் கஸ்டமராக சிலருக்கு கஞ்சா கொடுப்பதாகவும் ,சிகரெட் வாங்குவதுபோல இந்த கஞ்சா  விற்பனை நடைபெறுவதாகவும் போலீசுக்கு தகவல் வந்ததையடுத்து இந்த சோதனை நடந்தது.

பெங்களூரு ஓசூர் சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கஞ்சா விற்ற ஒரு பெண்ணையும் அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு ஓசூர் ரோட்டில் இண்டஸ்ட்ரியல் ஏரியாவில், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்றவாரம் அவர்கள் மாறுவேடத்தில் அங்கு கண்காணித்தனர்.பிறகு ஒரு மப்டி போலீஸ் அந்த கடையில் சென்று கஞ்சா கேட்க அங்கிருந்த பெண்மணியும்  கஞ்சா கொடுக்கும்போது சிக்கிக்கொண்டார்.
அந்த கடையில் அவர்கள் ரெகுலர் கஸ்டமராக சிலருக்கு கஞ்சா கொடுப்பதாகவும் ,சிகரெட் வாங்குவதுபோல இந்த கஞ்சா  விற்பனை நடைபெறுவதாகவும் போலீசுக்கு தகவல் வந்ததையடுத்து இந்த சோதனை நடந்தது.
அந்த சோதனையில் அந்த கடையிலிருந்த 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடைஉரிமையாளர்களான முனிராஜு மற்றும் யசோதா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கஞ்சா விற்ற ரந்தீர் குமார் என்ற நபரையும் கைது செய்தனர்.