சிகரெட் வித்து கல்லா கட்டும் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம்!

 

சிகரெட் வித்து கல்லா கட்டும் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம்!

சிகரெட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.113.54 கோடி ஈட்டியுள்ளது.

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் நிகர லாபமாக ரூ.113.54 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 57 சதவீதம் அதிகமாகும். 2018 செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனம் ரூ.72.33 கோடி மட்டுமே நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

சிகரெட்

கடந்த காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் 12.91 சதவீதம் அதிகரித்து ரூ.750.81 கோடியாக உயர்ந்தது. 2018 செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.664.92 கோடியாக இருந்தது.

சிகரெட்

2019 செப்டம்பர் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் நிறுவனத்தின் மொத்த செலவினமும் அதிகரித்துள்ளது. அந்த காலாண்டில் அந்த நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.652.08 கோடியாக அதிகரித்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் அந்நிறுவனம் செலவிட்ட தொகையான ரூ.570.59 கோடியை காட்டிலும் 14.28 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்துள்ளது.