சிகரெட் மீதான வரியை குறையுங்க! நிர்மலா சீதாராமனுக்கு அழுத்தம் கொடுக்கும் விவசாயிகள்!

 

சிகரெட் மீதான வரியை குறையுங்க! நிர்மலா சீதாராமனுக்கு அழுத்தம் கொடுக்கும் விவசாயிகள்!

ஜி.எஸ்.டி.யில் சிகரெட் மீதான வரி விதிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.க்கு முன்பு இருந்த கலால் வரியை காட்டிலும் தற்போது வரி அதிகமாக உள்ளதாக விவசாயிகள் சார்பான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே பெட்டிக்கடைகாரர்கள் முதல் பெரிய ஸ்டோர்கள் வரை சிகரெட்டை பதுக்க தொடங்கி விடுவர். ஏனென்றால் எப்படியும் பட்ஜெட்டில் சிகரெட் மீதான வரி உயர்ந்து விடும் என்ற நம்பிக்கைத்தான். அவர்கள் நம்பிக்கையை மத்திய நிதி அமைச்சர்களும் ஏமாற்றுவதில்லை. எந்தகட்சி ஆட்சிக்கு வந்தாலும் மத்திய பட்ஜெட்டில் சிகரெட் விலை மீதான வரி உயர்வது உறுதி என்ற நிலை இருந்து வந்தது. 

சிகரெட்

இந்நிலையில் 2017ல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது. ஜி.எஸ்.டி.யில் அதிகபட்ச வரி விகிதமான 28 சதவீதத்தில் சிகரெட் வந்தது. மேலும், அதன் மீது செஸ் வரி உள்ளிடவையும் விதிக்கப்படுகிறது. இதனால் சிகரெட் மீதான தற்போதைய மொத்த வரி,  ஜி.எஸ்.டி.க்கு முன்பு இருந்த வரியை காட்டிலும் அதிகமாக உள்ளது. இதனால் வர்த்தக பயிர்களை விவசாயம் செய்யும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் மற்றும் குஜராத் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே ஜி.எஸ்.டி. கீழ் சிகரெட் மீதான வரிவிதிப்பில் உள்ள குறைகளை திருத்த வேண்டும். செஸ் வரி காரணமாக ஜி.எஸ்.டி.க்கு முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது 13 சதவீதம் சிகரெட் மீதான வரி அதிகமாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகம், மத்திய வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு விவசாயிகளுக்கான தொண்டு நிறுவனமான எப்.ஏ.ஐ.ஏப்.ஏ. அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

சிகரெட்

2011-12 முதல் 2017-18ம் நிதியாண்டு வரையிலான கால கட்டத்தில் சிகரெட் மீதான வரி 3 மடங்கு உயர்ந்தது. ஜி.எஸ்.டி. அறிமுகத்துக்கு பின் சிகரெட் மீதான வரி 20 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.