சிகரெட் பிடிக்க கூடாது! ஆனா  சரக்கு அடிச்சுக்கலாம்! மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரால் சர்ச்சை 

சிகரெட் பிடிக்க கூடாது! ஆனா  சரக்கு அடிச்சுக்கலாம்! மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரால் சர்ச்சை 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் ‘மாஸ்டர்’ என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கடும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கூடவே பல சர்ச்சைகளும் சேர்ந்தே வருகிறது. விஜயின் ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒரு பிரச்னை வந்து கொண்டேதான் இருக்கிறது. இவை தானாக வருகிறதா? அல்லது வரவைக்க படுகிறதா? என்று தெரியவில்லை. 

thuppaki

விஜயின் பழைய படங்களில் சிகரெட் பிடிக்காத படங்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். நடிகர்கள் திரையில் செய்வதை ரசிகர்கள் அப்படியே நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றனர். தனது ஹீரோ சிகரெட் பிடித்தால், ரசிகனும் அது ஒரு கெத்து என்று தவறாக புரிந்துகொண்டு சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கின்றனர். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருந்தது, அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பின்பு நீக்கப்பட்டது. அதே பிரச்னை சர்க்கார் படத்திற்கும் வந்தது.

sarkar

இப்போது புதிதாக  வெளியிடப்பட்டுள்ள மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய் தனது கையில் மது பாட்டிலை வைத்திருக்கிறார். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு எதோ இசையை கேட்டபடி சாய்ந்திருக்கிறார். ‘ஒரு குட்டிகத சொல்லட்டுமா’ என்ற பாடல் வெளியீட்டிற்கான இந்த போஸ்டரில் விஜய் கையில் மது பாட்டில் வைத்திருப்பது மறுபடியும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.