சிஏஏ-வால் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டால் கூட பதிவியை துறப்பேன் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி

 

சிஏஏ-வால் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டால் கூட பதிவியை துறப்பேன் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதே போல, தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பின்னர், திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பேரணி நடத்தின. குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் வசிக்கும் எந்த மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மத்திய அரசுக்கு, தமிழக அரசு ஆதரவு தெரிவிப்பதால் அதிமுக சார்பில் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. 

ttn

இந்நிலையில் கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி, குடியுரிமை சட்டத்திருத்தத்தால் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டால் கூட அடுத்த நொடியே பதவியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார். மேலும்,  ஒற்றுமையாக உள்ள மக்களிடையே எதிர்க்கட்சி தான் பிரிவினையை உருவாக்கி வருகின்றனர் என்றும் கூறினார்.