சிஏஏ, என்பிஆர் குறித்து இஸ்லாமியர்களுடன் தமிழக அரசு ஆலோசனை!

 

சிஏஏ, என்பிஆர் குறித்து இஸ்லாமியர்களுடன் தமிழக அரசு ஆலோசனை!

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததிலிருந்து நாட்டில் பல கலவரங்கள் வெடித்தன

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததிலிருந்து நாட்டில் பல கலவரங்கள் வெடித்தன. இச்சட்டம் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் நிலையில் அதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. அதில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டிருந்தார். 

ttn

என்.பி.ஆரில் கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ள 3 கேள்விகள் சிறுபான்மையினர் அச்சத்திற்கு உள்ளாகும் வகையில் இருப்பதால், அதற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்துக்கு இன்னும் பதில் வராததால், தமிழகத்தில் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ttn

இதனையடுத்து, குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இஸ்லாமியர்களைச் சந்தித்துப் பேசத் தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் முடிவெடுத்து, 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையல், சென்னை தலைமைச் செயலகம் பழைய கட்டிடம் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டருகில் இஸ்லாமியர்களுடனான கூட்டம் தொடங்கியுள்ளது. அதில்,  தலைமை காஜி சலாவுதீன் ,ஹஜ் கமிட்டியின் அபு பக்கர்,மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.