சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போராட்டங்களைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகள் நியமனம் : டிஜிபி திரிபாதி

 

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போராட்டங்களைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகள் நியமனம் :  டிஜிபி திரிபாதி

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் 3 ஆவது நாளாக விடிய விடிய நடைபெற்று வருகிறது. 

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை – வண்ணாரப்பேட்டையில்  கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் இஸ்லாமியருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலர் படுகாயம் அடைந்தனர். இதனால், போலீசாரை கண்டித்து இஸ்லாமியர்களின்  சிஏஏ எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றது. 

ttn

இதனையடுத்து, சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர், போராட்டத்தில் பங்கேற்றுள்ள 23 இஸ்லாமியக் கூட்டமைப்பினரின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இதனால், மீண்டும் வரும் 19 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் 3 ஆவது நாளாக விடிய விடிய நடைபெற்று வருகிறது. 

ttn

இந்நிலையில், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களில் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று டிஜிபி திரிபாதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த 6 அதிகாரிகளும் மாநில சட்ட ஒழுங்கை பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.