சிஏஏவுக்கு எதிரான பதாகையுடன் சட்டப்பேரவைக்கு வந்த தமீமுன் அன்சாரி

 

சிஏஏவுக்கு எதிரான பதாகையுடன் சட்டப்பேரவைக்கு வந்த தமீமுன் அன்சாரி

சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி சிஏஏவுக்கு எதிரான பதாகையை ஏந்திய படி வந்தார்.

தமிழக துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த 14 ஆம் தேதி 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை 10 ஆவது முறையாகத் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் அறிவிப்புகளைத் தெரிவித்தார். தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த கூட்டத்தொடர் 17 ஆம் தேதி(இன்று) முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். அதன் படி இன்று காலை 10 மணிக்குச் சட்டப் பேரவை கூடியது. 

ttn

இரண்டு நாள் விடுமுறைக்கு இன்று மீண்டும் கூடிய சட்டப்பேரவையில் முதலாவதாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தற்போது பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது. இந்த கூட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு குறித்தும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை  எதிர்த்து இஸ்லாமியர்கள் 4 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ttn

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி சிஏஏவுக்கு எதிரான பதாகையை ஏந்திய படி வந்தார். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து சிஏஏவுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் படி தமீமுன் அன்சாரி மனு அளித்துள்ளார்.