“சிஎஸ்கே அணியில் 5 பேருக்கு கொரோனா”…நடைபெறுமா ஐ.பி.எல் போட்டி?!

 

“சிஎஸ்கே அணியில் 5 பேருக்கு கொரோனா”…நடைபெறுமா ஐ.பி.எல் போட்டி?!

ஆண்டு தோறும் கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கிடக்கும் ஓரே விஷயம் ஐ.பி.எல் போட்டி தான். கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி ஐக்கிர அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளது. ஐ.பி.எல் போட்டியில் முக்கியமான அணியாக கருதப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ். இதற்கான எல்லா புகழும் தோனியையே சேரும். 3 ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டியில் பட்டம் வென்ற சென்னை அணி இந்த ஆண்டும் பட்டத்தை பெற வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர்.

“சிஎஸ்கே அணியில் 5 பேருக்கு கொரோனா”…நடைபெறுமா ஐ.பி.எல் போட்டி?!

இதற்காக, தோனி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி தொடங்கிய நிலையில் சென்னை சிங்கங்கள் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றனர். அங்கு வீரர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் முடிவு வரும் வரை தனியாக தங்க வைப்பார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதன் படி வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

“சிஎஸ்கே அணியில் 5 பேருக்கு கொரோனா”…நடைபெறுமா ஐ.பி.எல் போட்டி?!

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழுவாக சென்ற 51 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை அணியை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 4 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.