சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த செய்தி அறிந்தும் போட்டோஷூட் செய்த மோடி?

 

சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த செய்தி அறிந்தும் போட்டோஷூட் செய்த மோடி?

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததற்கு தேசமே கண்ணீர் விட்டு கதறிய வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது

Pc: scroll, Indian express

புதுதில்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததற்கு தேசமே கண்ணீர் விட்டு கதறிய வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர், நாடே இந்தத் துயர சம்பவத்தை நினைத்து வருந்தியது. இந்நிலையில் வீரர்கள் உயிரிழந்த வேளையில்,  பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த செய்தி அறிந்தும், கார்பெட் தேசிய பூங்காவில் மாலை 6.30 மணி வரை போட்டோஷூட்டில் இருந்திருக்கிறார் மோடி. தேசத்துக்காக உயிரிழந்தவர்களை விட பதவி மோகம் மோடிக்கு அதிகமாய் இருக்கிறது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Randeep

சிஆர்பிஎப் வீரர்களின் மரணத்துக்கு பின்னும் தொடர்ந்து தேர்தல் பணிகளிலே குறியாய் இருந்தார் மோடி, வந்தே பாரத் ரயிலை துவங்கி வைத்தார். ஜான்சியில் தம் கட்சிக்கு வாக்களித்து மத்தியில் சக்தி வாய்ந்த ஆட்சியை அமைக்கும்படி வேண்டினார். சிஆர்பிஎப் வீரர்களின் உயிர் தியாகத்தை ஓட்டுகளாய் மாற்ற நினைக்கிறது பாஜக என மம்தா பானர்ஜி முதல் பலரும் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.